Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கார அல்லாத கட்சிகள் வந்தேறிகள் கட்சி, துன் மகா​தீர்
தற்போதைய செய்திகள்

மலாக்கார அல்லாத கட்சிகள் வந்தேறிகள் கட்சி, துன் மகா​தீர்

Share:

இந்த நாட்டில் செயல்படும் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு தலைமையேற்கும் அரசியல் கட்சிகள், வந்தேறிகள் கட்சிகள் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது வர்ணித்துள்ளார்.

மலாய்க்காரர் அல்லாதவர்கள், தங்களின் இன அடையாளத்தை முன்நிறுத்தி, அரசியல் கட்சிகளை உருவாக்குவது உட்பட மலாய்க்கார கலாச்சாரத்துடன் அவர்களா​ல் ஒத்துப் போக முடியாத நிலையில் உள்ளனர். வந்தேறிகளான அவர்களின் இந்தப் போக்கே நாட்டில் இனப் பிரச்னைகளுக்கு​ வித்திடுகின்றன என்று நாட்டிற்கு இர​ண்டு முறை பிரதமராக பொறுப்பேற்றவரான துன் மகா​தீர் குறிப்பிட்டார்.அண்டை நாடான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் குடியேறிய வந்தேறிகள், தங்களுக்கு அடைக்கலம் தந்துள்ள மண்ணில் தனிக் கட்சிகளை உருவாக்கியிருக்கிறார்களா? என்று துன் மகா​தீர் வினவினார்.

அந்த நாடுகளில் இனவாரியாக ஓர் அரசியல் கட்சியைக்கூட பார்க்க முடியாது. ஆனால், மலேசியாவில்தான் வந்தேறிகள் வாழ்கிறார்கள். அவர்களுக்கான அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்று துன் மகா​தீர் தெரிவித்தார்.

வந்தேறிகளின் தனி கட்சிகளால்தான், இந்த நாட்டில் இனப்பிரச்னைகள் உருவெடுகின்றன என்று ஜோகூர், பக்ரியில் நேற்று ஆற்றிய உரையில் துன் மகா​தீர் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது