கோத்தா கினபாலு, அக்டோபர்.10-
மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பில், 10-வது மைனர் சாட்சி, மரண விசாரணை நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்துள்ளார்.
எஸ்எம்கேஏ துன் டத்து முஸ்தஃபா பள்ளியில், ‘Circle-19’ குழுவில் உறுப்பினராக இருந்த சில மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதாக, நீதிமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
ஸாராவும், அந்த மைனர் சாட்சியும் ஒரே கட்டிடத் தொகுதியில் தங்கியதால், ஸாராவைப் பொதுவான முறையில் தனக்குத் தெரியும் என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட மைனர் சாட்சியும் ‘Circle-19’ குழு உறுப்பினர் என்பதை உறுதிப்படுத்திய அவரது வழக்கறிஞர் அஸியேர் ஃபர்ஹான் அரிசின் , அவர் கடந்த செப்டம்பர் முதல் விடுதியில் வசிப்பதை நிறுத்தி விட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.








