அம்னோ கட்சியின் ஆண்டுப் பொது கூட்டத்திற்கு ஜசெக கட்சிக்கு அழைப்பு விடுக்காத விவகாரம் தொடர்பாக ஜசெக எந்தவகையிலும் வருத்தப்படவில்லை என்றும் மாறாக அக்கட்சியின் இளைஞர் பிரிவு எடுத்துள்ள முடிவை தாங்கள் மதிப்பதாக ஜசெக கட்சியின் பரப்புரை பொது செயலாளர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு உறுப்பு கட்சியாக ஜசெக விளங்குவதால் அம்னோ கட்சி ஜசெகவிற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என அவர் மேலும் தெளிவுப் படுத்தினார்.
அனைத்துக்கட்சிகளுக்கும் தங்களுக்கென கொள்கையும், கட்டுப்பாடுகளும், கோரிக்கைகளும் உண்டு என்பதால் அம்னோ கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு அது அழைப்பு கொடுக்காதது ஜசெகாவிற்கு வருத்தம் எதுவும் இல்லை என தியோ தெரிவித்தார்.








