Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ரெம்பாவ்: ஆசிரியர் ஓட்டிய எஸ்யூவி வாகனம் மோதி 9 வயது சிறுவன் பலி
தற்போதைய செய்திகள்

ரெம்பாவ்: ஆசிரியர் ஓட்டிய எஸ்யூவி வாகனம் மோதி 9 வயது சிறுவன் பலி

Share:

நெகிரி செம்பிலான் மாநிலம், ரெம்பாவில், எஸ்யூவி வாகனம் மோதி, 9 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், வறிய மக்களுக்கான வீடமைப்புப் பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அஸ்மி அலி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது 42 வயது ஆசிரியர் ஒருவர் ஓட்டிச் சென்ற எஸ்யூவி இரக வாகனமானது, லேகோங் உலு தேசியப் பள்ளியிலிருந்து பி.பி.ஆர்.டி குடியிருப்புப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலின் தாக்கத்தால் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News