தற்போதைய அரசாங்கத்தின் நிலைதன்மை தொடர்பாக அண்மைய அறிக்கைகள் குறித்து மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கவலை தெரிவித்துள்ளார்.
15வது பொதுத் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 222 எம்.பி.க்களில் ஒரு தரப்பினர் இன்னும் நிலைத்தன்மையைத் தடம் புரள முயற்சிப்பவர்களாக உள்ளனர் என்று சுல்தான் குறிப்பிட்டார்.
சமூக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ அல்லது சர்வதேச அளவில் நாடு ஒரு நிலைப்பாட்டில் இருந்தாலும், எம்.பி.க்களால் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தாமல் போனால் அது ஆரோக்கியமற்றதாகும் என்று சுல்தான் குறிப்பிட்டார்.
"நம் நாட்டில் உள்ள 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நிலையை இன்னும் எவ்வளவு காலமத்திற்கு தாங்க வேண்டும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும், மலேசியாவின் செழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என்று சுல்தான் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related News

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு


