ஜோகூர்பாருவில் கடந்த புதன்கிழமை ஒரு வர்த்தக தளத்தின் முன்புறம், கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தில் சண்டையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ராவுப் செலமாட் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் போலீசார் எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்ற போதிலும் இப்படியொரு அடிதடி சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களை போலீசார் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








