May 24, 2026
Thisaigal NewsYouTube
பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா மரணம்
தற்போதைய செய்திகள்

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா மரணம்

Share:

செப்டம்பர் 18-

தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 85.

பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த சிஐடி சகுந்தலா, நேற்று மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி சி.ஐ.டி. சகுந்தலா மரணம் அடைந்தார். அவரின் இறுதி சடங்கு இன்று மாலை பெங்களூருவில் நடைபெறுகிறது.

மரணம் அடைந்த சி.ஐ.டி. சகுந்தலாவுக்கு செல்வி என்ற மகள் இருக்கிறார். சேலத்தை சேர்ந்த சி.ஐ.டி. சகுந்தலா, ஆரம்பத்தில் நாடகங்களில நடித்தார். 1960-ம் ஆண்டு 'கைதி கண்ணாயிரம்' என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

1970-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. சங்கர் என்ற படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது முதல் சி.ஐ.டி. சகுந்தலா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். படிக்காத மேதை, நினைவில் நின்றவள், ஒளிவிளக்கு, என் அண்ணன், ஜஸ்டிஸ் விஸ்வநாதன் புதிய வாழ்க்கை, இதய வீணை, ராஜராஜ சோழன், தேடி வந்த லட்சுமி, பாரத விலாஸ், தெய்வ பிறவி போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம், தெலுங்கு, கன்னட படங்கள் என 600-க்கும் மேற்பட்ட படங்களில் சி.ஐ.டி. சகுந்தலா நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்.-சிவாஜி என முன்னணி நடிகர்களின் படங்களிலும் சிஐடி சகுந்தலா நடித்துள்ளார்.

எம்ஜிஆர் நடித்த இதயவீணை, / ரவிந்சந்திரன், மேஜர் சுந்தரராஜன் நடித்த ஜஸ்டிஸ் விஸ்வநாதன் முதலிய படங்கள் சிஜடி சகுந்தலாவிற்கு பெரும் புகழை தந்தது.

1998-ம் ஆண்டுக்குப் பிறகு சிஐடி சகுந்தா, சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

Related News