கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
தங்கம் விலை வரும் அக்டோபர் மாதம் பத்து விழுக்காடு உயரலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளால் தங்கத்தின் விலை தற்போதையை விலையிலிருந்து செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் மேலும் 10 விழுக்காடு உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கும், மலேசிய ரிங்கிட்டுக்கும் இடையிலான வட்டி விகித வேறுபாடு குறைந்து வருவது, தேவையைத் தூண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருப்பதால் தங்கம் தொடர்ந்து விலை உயரும் திறனைக் கொண்டுள்ளது என்று மலேசிய தங்க கொள்முதல் சங்கத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ லுயிஸ் ங் தெரிவித்துள்ளார்.








