Jul 16, 2026
Thisaigal NewsYouTube
கைக்குண்டு எறிதல் பயிற்சிகளை ராணுவம் உடனடியாக நிறுத்தியது
தற்போதைய செய்திகள்

கைக்குண்டு எறிதல் பயிற்சிகளை ராணுவம் உடனடியாக நிறுத்தியது

Share:

கைக்குண்டு எறிதல் பயிற்சியின் போது நிகழ்ந்த விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராணுவம் அனைத்து கைக்குண்டு எறிதல் பயிற்சிகளையும் உடனடியாக நிறுத்திவைத்துள்ளது. விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்காக இப்பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அஸ்ஹான் முகமட் ஒத்மான் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும், உரிய இழப்பீடுகளும் வழங்கப்படும் என்றும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News