Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சைபர்டிஎஸ்ஏ இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் – இலக்கவியல் அமைச்சர் உறுதி
தற்போதைய செய்திகள்

சைபர்டிஎஸ்ஏ இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் – இலக்கவியல் அமைச்சர் உறுதி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

Digital Services, Defense and Security Asia எனும் CyberDSA 2025 கண்காட்சி மாநாட்டை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 2 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில், 45 நாடுகளில் இருந்து வந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிபுணர்கள் மற்றும் 15 நாடுகளைச் சேர்ந்த 150 கண்காட்சி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆசியாவையும்
அதற்கு அப்பாற்பட்ட பகுதிகள் எதிர்நோக்கும் சிக்கலான இணையப் பாதுகாப்பு சவால்களை வெல்லும் நோக்குடன் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தாக்குதல்கள், சப்ளை செயின் பாதிப்புகள், செயல்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கிய அடித்தள வசதிகளுக்கான அச்சுறுத்தல்கள் — என்பது தூரத்திலிருக்கும் அச்சுறுத்தல்கள் அல்ல. அவை தற்போது எதிர்கொள்ளும் சவால்கள். அவை தொடர்ந்து பரிணாம மாற்றத்திற்குட்படும் அபாயங்களாகக் கருதப்படுகின்றன

இவை தேசிய பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கக் கூடியவையாகும். ஆக, திடமாக இவற்றை எதிர்கொண்டு அதிலிருந்து மீள்வது, பொருளாதார முன்னேற்றத்திற்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் அடித்தளம் ஆகும்.

இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையானது வணிகங்கள் வளர்வதற்கும், அரசு நல்லாட்சி புரிவதற்கும், குடிமக்கள் பாதுகாப்பாக டிஜிட்டல் மாற்றத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கிறது.” என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு