பூச்சோங், அக்டோபர்.02-
கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சோங், பத்து தீகா பிளாஸ் டோல் சாவடி அருகில் ஒரு காரை வழிமறித்து முரட்டுத்தனமான நடந்து கொண்டதாகக் கூறப்படும் சாலை ரவுடிகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவாறு சுமார் 20 பேர் கொண்ட கும்பல் காரை எட்டி உதைத்தவாறு அராஜகம் புரிந்த இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வரைலானதைத் தொடர்ந்து அந்த காணொளியில் அடையாளம் காணப்பட்ட சந்தேகப் பேர்வழிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கைது நடவடிக்கை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகக் கடைசியாக நேற்று இரவு பூச்சோங்கில் 16 வயது மதிக்கத்தக்க இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








