கோலாலம்பூர், ஜூலை.24-
நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் பெட்ரோல் ரோன் 95 விலை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுக்கு குறைக்கப்படுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காரணம் அல்ல. மாறாக உலகளாவிய நிலையில் எரிபொருள் விலை சீரமைப்பின் காரணமாக பெட்ரோல் ரோன் 95 விலை குறைக்கப்படவிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் கூறுகிறார்.
இதன் விளைவாக தாய்லாந்து உட்பட பல ஆசியான் நாடுகள் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தவிர உலகளாவிய நிலையில் எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
எனவே பெட்ரோல் ரோன் 95 விலை குறைக்கப்படுவதற்கு அன்வார் காரணம் அல்ல என்று நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் லாருட் எம்.பி.யும், பெர்சத்து கட்சியின் துணைத் தலைவருமான ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார்.








