ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.09-
தாம் ஒரு சிங்கப்பூர் பிரஜை என்று அடையாளப்படுத்திக் கொண்டு அறிமுகமான ஆடவரிடம் மனதைப் பறி கொடுத்து, லவ் ஸ்கேம் மோசடியில் சிக்கிய 53 வயது பெண் நிர்வாகி ஒருவர், தமது சேமிப்புப் பணமான 23 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட்டைப் பறி கொடுத்துள்ளார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தனது உறவுக்காரர் மூலம் அந்த நபர் அறிமுகமானதாகவும், தம்மைத் திருமணம் செய்து கொள்வதாக அந்த ஆடவர் வாக்குறுதி அளித்திருந்ததாகவும் அந்த மாது தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அந்த ஆடவர் கனடா, ஒட்டாவில் வசிப்பதாகவும், வாட்ஸ்ஆப்பிலேயே தம்மைத் தொடர்பு கொண்ட நிலையில் தன்னை வசியப்படுத்தி, தனது சேமிப்புப் பணத்தைச் சன்னம் சன்னமாகக் கரைத்து விட்டதாக அந்த பெண் நிர்வாகி போலீசில் புகார் செய்துள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் முகமட் அல்வா ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.








