கோலாலம்பூர், செப்டம்பர்.08-
டிக் டாக் தளத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வீட்டை எரிப்பதற்கு மிரட்டல் விடுத்துள்ள நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி ஷா ஆலாம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை சாதாரணமாகக் கருதி விடக்கூடாது. இது கடுமை வாய்ந்ததாகும் என்று கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளது.
மிரட்டல் விடுத்துள்ள அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் பாரிகுள் ஸாமான் பாத்தாருல் கேட்டுக் கொண்டுள்ளார்.








