கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
தென்கிழக்காசியாவில் மலையேறும் நடவடிக்கைகளுக்கு 10 இடங்களில் மிகச் சிறந்த 9 வழிதடங்களில் ஒன்றாக மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மலையேறும் நடவடிக்கையில் சொர்க்கப் பூமியாக மலேசியா திகழ்கிறது என்று சுற்றுப் பயணிகளுக்கான ஓன்லைன் தளமான எக்ஸோதிக்கா தெரிவித்துள்ளது.
தென்கிழக்காசியாவில் புருணை, கம்போடியா, தீமோர் லெஸ்தே, இந்தோனேசியா, லாவோஸ், மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய 11 நாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதில் மலையேறும் நடவடிக்கைகளுக்கு மிகச் சிறந்த ஒன்றாக மலேசியாவைச் சுற்றுப் பயணிகள் தேர்வு செய்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.








