பத்து காவான், அக்டோபர்.23
ஆடவர் ஒருவர் காரில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை மாலை 4.10 மணியளவில் பினாங்கு, பத்து காவான், பண்டார் காசியா டோல் சாவடி அருகில் உள்ள கார் நிறுத்தும் ஓய்வுத்தளத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக பினாங்கு மாநில உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
43 வயது மதிக்கத்தக்க அந்த நபர், டொயோட்டா வியோஸ் ரகக் காரில் இறந்து கிடந்தார். விசாரணைக்காக அந்த ஆடவரின் உடல், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








