Sep 22, 2026
Thisaigal NewsYouTube
வாடகை கொள்முதல் கடனில் புதிய முறை: 14 வங்கிகள் கடன் நிலுவையின் அடிப்படையில் குறையும் வட்டி முறைக்கு மாறின
தற்போதைய செய்திகள்

வாடகை கொள்முதல் கடனில் புதிய முறை: 14 வங்கிகள் கடன் நிலுவையின் அடிப்படையில் குறையும் வட்டி முறைக்கு மாறின

Share:

நாட்டிலுள்ள 20 வங்கிகளில் 14 வங்கிகள் வாடகை கொள்முதல் கடன்களுக்கு கடன் நிலுவையின் அடிப்படையில் குறையும் வட்டி முறையை வழங்கத் தொடங்கியுள்ளன.

மீதமுள்ள ஆறு வங்கிகளும் பழைய நிலையான வட்டி விகிதம் மற்றும் ‘ரூல் ஓஃப் 78’ முறையிலிருந்து புதிய முறைக்கு வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மாறும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

மலேசிய வாடகை கொள்முதல் நிறுவனங்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ள 429 சேவை வழங்குநர்களில் 80 விழுக்காடு, புதிய முறைக்கு மாறி வருவதாக அவர் கூறினார்.

புதிய சட்டத் திருத்தத்தின்படி, ‘ரூல் ஓஃப் 78’ முறை நீக்கப்பட்டுள்ளதுடன், இனி வட்டி தற்போதைய அசல் கடன் நிலுவையின் அடிப்படையில் கணக்கிடப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

Related News