அக்டோபர் 22 முதல் அக்டோபர் 28 வரையிலான காலக் கட்டத்தில் டெங்கிக் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 0.4 விழுக்காடு அதிகரித்து 2,272 சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்ட சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் ரட்சி அபு ஹாஸ்ஸான் தெரிவிக்கயில், குறிப்பிட்ட வாரத்தில் டெங்கியால் மரணச் சம்பவம் ஏதும் நேர வில்லை எனக் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு இது நாள் வரையில் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,715 பேர் ஆகும். இதே காலக் கட்டத்தில் கடந்த ஆண்டு 49,569 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மொத்தமாக 73 மரணச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
சிலாங்கூரில் 49 பகுதிகள், கோலாலம்பூர் - புத்ராஜெயாவில் 9 பகுதிகள், பேரவில் 6 பகுதிகள், பினாங்கு, நெகிரி செம்பிலான், பகாங், சரவாக் ஆகிய மாநிலங்களில் தலா 1 பகுதியும் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளன.








