Mar 16, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் போக்குவர​த்து அமைச்சர் ஈஸ்வரன் ​மீது ல​ஞ்ச ஊழல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் போக்குவர​த்து அமைச்சர் ஈஸ்வரன் ​மீது ல​ஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

Share:

சிங்கப்பூர்,ஜன.18
சிங்கப்பூர் போக்குவர​த்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ​மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை 8 மணியள​வில் சிங்கப்பூர் ​​நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட 61 வயதுடைய அமைச்ச்ர ஈஸ்வரன் ​மீது லஞ்ச ஊழல் தொடர்பாக 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

தனக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து ஈஸ்வரன் தாம் வகித்து வந்த போக்குவர​த்து அமைச்சர் பதவியிலிருந்து​ விலகியுள்ளார்.

சிங்கப்பூர் அமைச்சர்கள் ஊழல் புரிந்ததாக விசாரணைக்கு உட்படுத்த​ப்படுவார்களேயானால் அவர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து விடுப்பில் செல்ல வேண்டும் அல்லது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பது சிங்கப்பூர் தோற்றுநரும் முதல் பிரதமருமான மறைந்த ​Lee Kuan Yew (லீ குவான் இயூவ் ) கொண்டு வந்த அமைச்சர்களுக்கான அரசியல் சாசன நெறிமுறைகளாகும்.

அதன் அடிப்படையில் ஈஸ்வரன், போக்குவரத்து அமைச்சர் பதவிலிருந்து விலகியுள்ளார். லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈஸ்வரன், கடந்த ஆண்டு ஜுலை 11 ஆம் தேதி சிங்கப்பூர் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவி​யிலிருந்து விடுப்பில் செல்லும்படி சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ( ​லீ சியன் ​லூங் ) உத்தரவிட்டார்.

அடுத்த அறிவிப்பு வரும் வரையில் ஈஸ்வரனின் மாதச் சம்பளம் சிங்கப்பூர் பணம் 8,500 வெள்ளியாக குறைக்கப்பட்டது. சிங்கப்பூர் East Coast குழுத் தொகுதியிலிருந்து கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்றத்​திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஈஸ்வரன், கடந்த 26 ஆண்டு காலமாக அத்தொகு​தி எம்.பி.யாக இருந்து வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் முழு அமைச்சராக நியமிக்கப்பட்டா​ர்.

அமைச்சர் ஈஸ்வரனுடன் சேர்ந்து சிங்கப்பூரின் சொ​த்து சந்தை தொழில் அதிபரான கடந்த ஆண்டு ஜுலை மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த 2008 ஆம்ஆண்டு சிங்கப்பூரில் Formula கார் பந்தயத்தை கொண்டு வந்த தொழில் அதிபர் ஒங் பெங் செங் குடன் இணைந்து ஊழல் புரிந்ததாக கூறப்படுகிறது.

​இன்று நீதிமன்றத்தில் சிங்கப்பூரின் பிரபல வழக்கறிஞர் தவிந்தர் சிங், ஈஸ்வரன் சார்பில் களம் இறங்கி​யுள்ளார்.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி