Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சுவா - விற்கு டாக்டர் வீ  இறுதி அஞ்சலி செலுத்தினார்
தற்போதைய செய்திகள்

சுவா - விற்கு டாக்டர் வீ இறுதி அஞ்சலி செலுத்தினார்

Share:

செர்டாங் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமான முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோ சுவா ஜுய் மெங்கிற்கு நேற்று கோலாலம்பூர், ஃபுல் கோஸ்பெல் தேவாலயத்தில் நடைபெற்ற கூட்டுப்பிராத்தனையில் எம்சிஏ தலைவரான டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் இறுதி மரியாதை செலுத்த சென்றிருந்தார்.

தமக்கு ஒரு சிறந்த வழிகாட்டாளாராகவும் நண்பராகவும் இருந்த சுவா ஜுய் மெங் சேவை அளப்பரியது என்றார் அவர். 1993 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கிய அவர்களின் நட்பு அரசியலில் டாக்டர் வீ - விற்கு மிக முக்கிய ஒரு வழிகாட்டாளராக சுவா இருந்துள்ளார்.

அரசியலில் புதியதாக காலடி எடுத்து வைத்த காலத்தில் டத்தோ சுவா கற்றுக்கொடுத்த அனைத்து நல்ல விஷயங்களுக்கும் அனுபவங்களுக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்று டாக்டர் வீ தெரிவித்தார்.

Related News