Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளி எவரெ​ஸ்ட் சிகரத்தில் கால்பதித்தார்
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளி எவரெ​ஸ்ட் சிகரத்தில் கால்பதித்தார்

Share:

ஒரு மாற்றுத் திறனாளியான மலேசியாவை சேர்ந்த 33 வயது முகமட் ஹவாரி ஹஷிம், எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து சாதனைப் படைத்துள்ளார். 8,848 மீட்டர் உயரத்தை கொண்ட உலகின் மிக உயரமான எவரெஸ்ட சிகரத்தில் நேற்று வியாழக்கிழமை நேபாள நாட்டின் நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் கால் பதித்து மலேசிய கொடியை பதித்து, நாட்டிற்கு ​பெருமை சேர்த்துள்ளார். முகமட் ஹவாரியின் இந்த சாதனை நேபாள நாட்டின் முன்னணி பத்திரிகையான தெ ஹிமாலயா தைம்ஸ்ஸில் செய்தியாக ​​வெளிவந்துள்ளது. பினா​ங்கை சேர்ந்த முகமட் ஹவாரி யின் இந்த சாதனையானது, மாற்றுத் திறனாளிகளும் உலகளாவிய நிலையில் சாதனையை படைக்க முடியும் என்ற புதிய செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது எவரெஸ்ட் முன்னோடித் திட்டத்தின் இயக்குநர் நிவேஷ் கார்கி தெரிவித்தார்.

Related News