Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய ஜோடி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய ஜோடி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டனர்

டிச. 15-

2024 இன் பூப்பந்து இறுதிப் போட்டியில் சீனாவின் Zheng Si Wei/ Huang Ya Qiong ஜோடிக்கு எதிராகக் களமிறங்கிய மலேசியாவைச் சேர்ந்த Chen Tang Jie/ Toh Ee Wei ஜோடி சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிட்டது. இந்த கலப்பு இரட்டையர் போட்டி மூன்று செட்டுகள் வரை நீடிதது சீன அணிக்கு சாதகமாக முடிந்தது.

சீன ஜோடி முதல் செட்டை 21க்கு-18 என்ற கணக்கில் வென்றது. பின்னர், Tang Jie/ Ee Wei ஜோடி 21க்கு-14 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை வென்று போட்டியை மூன்றாவது செட்டுக்கு கொண்டு சென்றனர். அதில் சீனாவின் , Si We/ Ya Qiong ஜோடி 17க்கு-21 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை வென்று வெற்றியைத் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.

ஒரு மணி நேரம் 15 நிமிட போட்டியில் தோல்வியடைந்ததால், மலேசிய ஜோடி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →