Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ஒரு டத்தோ உட்பட இருவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரு டத்தோ உட்பட இருவர் கைது

சிபு , அக்டோபர் 08-

சரவாக், சிபுவில் உதவித்தொகைக்குரிய டீசல் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் டத்தோ அந்தஸ்தைக் கொண்ட பிரமுகர் ஒருவர் உட்பட இரு நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

60 வயது மதிக்கத்தக்க ஒரு நபரும், ஒரு மாதுவும் தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விருவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக SPRM இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →