கோத்தா பாரு, செப்டம்பர்.26-
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கோல கிராய், கம்போங் பத்து பாலாய், ஜாலான் கோல கிராய்-கோத்தா பாரு அருகே 15 பயணிகளுடன் சென்ற விரைவுப் பேருந்து ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
அதிகாலை 5.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து, பொதுமக்கள் மெர்ஸ் மூலமாக கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 5.54 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த மீட்புத் துறையினர், காயமடைந்தவர்களையும், பேருந்தின் உள்ளே சிக்கிக் கொண்டவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணியில் தற்போது 13 தீயணைப்பு வீரர்களும், 3 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபட்டு வருகின்றன.








