May 22, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது

Share:

ஈப்போ, பிப்ரவரி 24 -

ஈப்போ, லாஹாட், பாண்டார் மைன்ஸ், பழைய ஈயக்குட்டையில் பெண்ணின் சடலம் மிதப்பது இன்று கண்டு பிடிக்கப்பட்டது.

சில மணி நேரத்திற்கு முன்புதான் இறந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படும் அந்த பெண்ணின் சடலம், ஈயக்குட்டையில் மிதப்பதை கண்ட பொது மக்கள் காலை 10.20 மணியளவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

நேர்த்தியான உடை அணிந்திருந்த அந்தப் பெண்ணின் அடையாளகார்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் அந்தப் பெண்ணின் சடலம் காலை 10.20 மணியளவில் மீட்கப்பட்டது.
பரிசோதனைக்காக சடலம், ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பேரா மாநில தீயணைப்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்சி னோர் அஹ்மாட் தெரிவித்தார்.

Related News