Sep 12, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 5-வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 5-வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் படுகாயம்

Share:

ஜோகூர் பாரு, பண்டார் உடா உத்தாமாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 3 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது, அச்சிறுவன் வீட்டின் ஹாலில் இருந்த சோபாவில் ஏறி, திறந்திருந்த ஜன்னல் வழியாக கீழே விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜோகூர் பாரு உத்தாரா போலீஸ் தலைவர் ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்துள்ளார்.

மேலும், அச்சிறுவன் கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடப் பகுதியில், தலையிலும் கழுத்திலும் கடுமையான காயங்களுடன், உட்புற இரத்தக்கசிவுடன் மயக்க நிலையிலில் கிடந்ததாகவும் ராடின் ரம்லான் ராடின் தாஹா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த சிறுவன் தற்போது சுல்தானா அமீனா மருத்துவமனை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்