Oct 15, 2026
Thisaigal NewsYouTube

அபாயகரமாக வாகனங்கள் செலுத்தப்பட்டதில் இருவர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், ஜன.30-

சீனப்புத்தாண்டுக்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு, கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் ஒரு கேளிக்கை மையத்தின் முன்புற சாலையில், திரைப்படத்தில் வருவதைப் போல மிக அபாயகரமாக படுவேகத்தில் இரு வாகனங்கள் செலுத்தப்பட்டு, மற்ற வாகனங்களை கண்மூடித்தனமாக மோதித் தள்ளியதில் இருவர் காயமுற்றனர்.

இந்த சம்பவத்தில் Toyota Hilux வாகனமும், Toyota Vios காரும் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த பயங்கரச் சம்பவத்தை அந்த கேளிக்கை மையத்திற்கு வெளியே குழுமியிருந்தவர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சாலையோரத்தில் நின்ற வாகனங்களை மோதியதில் இருவர் காயமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வாகனம் படுவேகத்தில் செலுத்திய போது, அதனைத் தடுப்பதற்கு பொது மக்கள் ஓடிய போதிலும், அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்துவதில் அவர்கள் தோல்விக் கண்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மஷாரின்மான் கூ மாமூட் உறுதிப்படுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்