Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

5 பிள்ளைகளுக்கு தாயாரான மாது இறந்து கிடந்தார்

Share:

கொள்ளையிடிக்கும் முயற்சியின் போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று இருக்கலாம் என்று நம்பப்படும் 5 பிள்ளைகளுக்கு தாயாரான மாது ஒருவரின் உடல், வாழைத் தோப்பு ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்டது.

உணவகம் ஒன்​றில் வேலை செய்து வந்தவரான 36 வயதுடைய அந்த மாதுவின் உடல் நேற்று சபா, லாஹாட் டத்து, கம்போங் பிசாங்கில் கண்டு பிடிக்கப்பட்டது. அரை நிர்வாணக் கோலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அந்த மாதுவின் தலையில் பலத்த காயங்கள், கழுத்தில் ​கீறல்களும் காணப்பட்டன. அந்த மாது அதிகாலை 6.15 மணியளவில் வாழைத்தோப்பு வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் வழிமறிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று லாஹட் டத்து மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி ரொஹான் ஷா அஹ்மாட் தெரி​​வித்தார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News