Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இறையாண்மையை தற்காப்பதில் மலேசியர்கள் முழு ஆதரவு
தற்போதைய செய்திகள்

இறையாண்மையை தற்காப்பதில் மலேசியர்கள் முழு ஆதரவு

Share:

தங்களை சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டு எட்டு பேர், மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கையில் நாட்டின் இறையாண்மையை காப்பதில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு மலேசியர்கள் தொடர்ந்து பிளவுப்படாத ஆதரவை வழங்கி வருகின்றனர் என்று அம்னோ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிற்கு எதிராக எந்தவொரு தரப்பினரும் உரிமைக்கோரல்கள் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நாட்டின் இறையாண்மையை தற்காப்பதில் மலேசிய அரசாங்கம் நடத்திய வரும் போராட்டத்திற்கு மக்கள் தொடர்ந்து தங்கள் பிளவுப்படாத ஆதரவை வழங்கி வருகின்றனர் என்று கலாபாக்கான் அம்னோ டிவிஷன் தலைவர் சம்சுடின் யூசோப் குறிப்பிட்டார்.

தீய நோக்கத்துடன் நடத்தப்படும் சூலு சுல்தான் வாரிசுதாரர்களிள் இந்த உரிமைகோரல் விவகாரத்தில் முழு வீச்சில் போராட்டம் நடத்தி வரும் சட்டத்துறை தலைவர் அஸாலினா ஒத்மான் சாயிட்டிற்கு அம்னோ பேராளர்கள் தங்கள் பாராட்டைத் தெரிவித்துக்கொண்டனர்.

Related News