தெலுக் இந்தான், செப்டம்பர்.21-
சிம்பாங் பூலாய் பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்மணியின் மரணத்திற்குக் குடும்பச் சண்டையே காரணம் எனச் சந்தேகிக்கப்படுவதாக பேரா மாநிலக் காவற்படையின் தலைவர் நோர் ஹிசாம் நோர்டின் உறுதிப்படுத்தியுள்ளார். இச்சம்பவத்தில் முக்கியச் சந்தேக நபர் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதாகக் கருதப்படுவதால், இண்டர்போல் உதவியுடன் அவரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தக் கொலைக்கான உண்மைக் காரணம் அந்த முக்கியச் சந்தேக நபரைக் கைது செய்த பின்னரே தெரிய வரும் என நோர் ஹிசாம் நோர்டின் குறிப்பிட்டார்.








