குவால சிலாங்கூர் சுங்ஙை யு அருகே உள்ள கோழிப்பண்ணை உடனடியாக மூடப்பட்ட ஆணையிடப்பட்டுள்ளது. சுற்றிவட்டார மக்களுக்கு ஈ தொல்லை இருப்பதாகப் புகார் செய்யப்பட்ட பிறகு அந்தக் கோழிப்பண்ணை மூடப்பட்டது.
கோலா சிலாங்கூர் மாநகர மன்றத்தின் சுகாதாரம், சுற்றுச்சூழல் துறையின் இயக்குனர் ஜெஃப்ரி அப் மனாஃப் குறிப்பிடுகயில், கோலா சிலாங்கூர் மாவட்ட கால்நடை அலுவலகம், மாவட்ட நில அலுவலகம், காவல்துறை ஆகுஅவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் விளைவாக இந்த கோழிப்பண்ணை மூடப்பட்டது என்றார்.
மேலும், கோழிப்பண்ணை செயல்பட்ட இடத்தைத் தூய்மைப்படுத்தி முறையான அனுமதியைப் பெற்று இயங்கவும் அதன் முதலாளிக்கு வலியுறுத்தப்பட்டது.







