பகாங், குவந்தான் மற்றும் பெக்கான் ஆகிய நகரங்களை இலக்காக கொண்டு மோட்டார் சைக்கிள்களை களவாடி வந்த கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.
"கேங் தௌஸ் சலோங்” என்ற அந்த கும்பலை முறியடித்தது மூலம் 16 க்கும் 24 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு ஆடவர்களை போலீசார் கைது செய்து இருப்பதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமது ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டதாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையல்போலீசார் புலன் விசாரணை செய்ததில் இந்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக வான் முகமது ஜஹாரி குறிப்பிட்டார்.








