நாட்டின் தேசிய மலையேறும் வீரரான ஆர்.ஜே. நாகராஜன், எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து, உலகில் உள்ள ஏழு உயரமான மலைகளையும் ஏறிய இரண்டாவது மலேசியர் என்ற பெருமையையும் பெற்று புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
59 வயதுடைய நாகராஜன் மலேசிய நேரப்படி நேற்று நண்பகல் 12.45 மணியளவில் 8, 848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக கால் பதித்து இச்சாதனையைப் படைத்துள்ளார்.
தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள உலகின் மிக உயர்ந்த ஏழு மலைகளை ஏறி நாகராஜன் நாட்டிற்கு பெருமையை ஈட்டித்தந்துள்ளார்.
இவருக்கு முன்னதாக, டத்தோ முகமட் முகராபின் மொக்தர்ருடீன் என்பவர் உலகின் ஏழு உயரமான சிகரங்களையும் ஏறி முதல் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


