கோலாலம்பூர், அக்டோபர்.12-
நாடு முழுவதும் 34 மாரா இளநிலைக் கல்லூரிகளில் சுமார் 2 ஆயிரத்து 724 மாணவர்கள் இன்ஃபுளுவென்ஸா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மத்தியில் 50-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவானதையடுத்து, எனவே, எம்ஆர்எஸ்எம் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே கற்றல்-கற்பித்தலைச் செயல்படுத்துமாறு மாரா அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாரா நிர்வாகம் இந்தத் துரித நடவடிக்கையை எடுத்துள்ளது. இன்ஃபுளுவென்ஸா தொற்றுச் சங்கிலியைத் துண்டிக்கவும், சுகாதாரச் சீராக்கல் பணிகளை மேற்கொள்ளவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மாரா தலைவர் டத்தோ அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்தல், நோய்வாய்ப்பட்ட மாணவர்களைத் தனிமைப்படுத்தல், முகக் கவசம் அணிவதை உறுதிச் செய்தல் போன்ற முக்கியமான நடவடிக்கைகள் எம்ஆர்எஸ்எம் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகின்றன என்றார் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி. அத்துடன், வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு, மாவட்ட சுகாதார அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.








