சுபாங் ஜெயா, நவம்பர்.05-
கடந்த ஆகஸ்ட் மாதம் சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் இளம் பெண் ஒருவர் இறந்து கிடந்தது தொடர்பான போலீஸ் புலன் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பான அறிக்கை பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 20 வயதுடைய அந்தப் பெண்ணின் மரணம் தொடர்பில் நீதி வேண்டும் என சமூக ஊடகங்களில் சில தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அந்தப் பெண், வீட்டு வரவேற்பு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியப்படி காணப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் மொத்தம் 32 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை வழக்காகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது என்றார்.








