பகாங், குவாந்தானில் உள்ள ஜாலான் கம்புட் சாலையில் அமைந்திருக்கும் இரு பொழுதுபோக்கு மையங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட 65 பேர் தடுப்புக் காவலுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய Operasi Pusat Hiburan dan Operasi Noda சோதனையில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பெண்கள் உட்பட 16 பேர் 21 முதல் 44 வயதுக்கு உட்பட்ட மலேசியர்கள் என குவாந்தான் மாவட்டக் காவல் துறை தலைவர் எசிஸ்டன் காமிஷனர் வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
எஞ்சியோரில் 10 பேர் வங்காளதேசிகள், 39 பேர் 21 முதல் 49 வயதுக்கு உட்பட்ட சீனா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் எனவும் அவர் தகவல் வெளியிட்டார்.
அதே சமயம், 6 கைப்பேசிகள், 6 துண்டுகள், வணிக ஆவணங்கள், ரொக்கப் பணம் 8 ஆயிரத்து 740 வெள்ளி ஆக்யவற்றையும் காவல் துறை கைப்பற்றி உள்ளது.
முதற்கட்ட சிறுசீர் சோதனையில் 9 மலேசியர்களும் ஒரு வெளிநாட்டுவாசியும் போதைப் பொருள் உட்கொண்டது உறுது செய்யப்பட்டது.
இந்தச் சோதனை நடவடிக்கையில் பேரா மாநில காவல் துறையால் தேடப்பட்டு வந்த ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக வான் முகமட் ஜஹாரி குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டுவாசிகள் அனைவரும் குடிஎஉழைவுச் சட்டத்தின் பல்வேறு உட்பிரிவுகளின் அடிப்படையிலும் போதைப் பொரு
ள் தடுப்புச் சட்டப்படியும் விசாரிக்கப்படுவர் எனவும் வான் முகமட் ஜஹாரி கூறினார்.








