கூலிம், ஜனவரி.13-
கூலிம் மாவட்டம் சுங்கை செடிம், ஆற்றில், 5 நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற 16 வயது மாணவர், முஹமட் ஹாஸிக் டானிஷ் முஹமட் ஹாஃபிசுல் கைரி, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நேற்று மாலை நடந்த இச்சம்பவத்தின் போது, முஹமட் ஹாஸிக் தனது 5 நண்பர்களுடன் அந்த ஆற்றில் குளித்து கொண்டிருந்த வேளையில், அவர்களில் ஒருவர் ஆற்றில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயன்ற உஹமட் ஹாஸிக், ஆற்று நீரால் அடித்துச் செல்லப்பட்டதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், ஆற்றில் மூழ்கிய அந்த நபர், மரக்கிளை ஒன்றைப் பிடித்து உயிர் தப்பிவிட்டதாகவும் ஸுல்கிஃப்லி அஸிஸான் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், மரத் தண்டு ஒன்றில் சிக்கிய நிலையில் இருந்த முஹமட் ஹாஸிக்கை மீட்டனர்.
என்றாலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.
தற்போது, முஹமட் ஹாஸிக்கின் உடலானது பிரேதப் பரிசோதனைக்காக கூலிம் பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்துள்ளார்.








