Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பெண் மானபங்கம், ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பெண் மானபங்கம், ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஜூன் 18-

வீட்டு உபகரணப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் மாது ஒருவரை மானபங்கம் செய்ததாக e-hailing ஓட்டுநர் ஒருவர் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

38 வயது இர்வான் லெசா என்ற அந்த e-hailing ஓட்டுநர், மாஜிஸ்திரேட் இர்வான்ஐனா அசாஹ்ரா அரிஃபின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

செலாயாங்கில் உள்ள ஒரு கடையில் கடந்த ஜுன் 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் 38 வயதுடைய மாதுவிடம் அந்த நபர் ஆபாச சேட்டைப்புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த வாகன ஓட்டுநர், சம்பந்தப்பட்ட மாதுவின் தோளில் கைப்போட்டு, ஆபாசமாக நடந்து கொள்ளும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலானதைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் வளைத்துப் பிடித்தனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படித் தண்டடனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 354 பிரிவின் கீழ் அந்த e-hailing ஓட்டுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

பெண் மானபங்கம், ஆடவர் மீது குற்றச்சாட்டு | Thisaigal News