கம்போடியா தலைநகர் நோம்பெனில் நேற்று நிறைவு பெற்ற 32 ஆவது தென்கிழக்காசிய விளையாட்டான சீ போட்டியில் மலேசியாவின் தரம் வீழ்ந்தது. 40 தங்கத்தை கைப்பற்றும் இலக்குடன் 676 தடகள வீரர்கள் களம் இறக்கப்பட்ட நிலையில் மலேசியாவினால் 34 தங்கம், 45 வெள்ளி மற்றும் 97 வெண்கலம் மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
64 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா மிக மோசமான அடைவு நிலையைப் பதிவு செய்து இருப்பது இதுவே முதல் முறையாகும். 11 நாடுகளில் மலேசியா 7 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா ஆறாவது இடத்தைப் பிடித்த நிலையில் தற்போது ஒரு படி பின்தள்ளப்பட்டது.
சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளை விட மலேசியா பின்தங்கியது. இப்போட்டியில் வியட்நாம், 136 தங்கம், 105 வெள்ளி மற்றும் 114 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


