ஈப்போ, நவம்பர்.14-
வீடு ஒன்று தீப்பற்றிக் கொண்டதில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 4.20 மணியளவில் ஈப்போ, தாமான் பெர்பாடுவான் ரியாவில் நிகழ்ந்தது.
தீயணைக்கும் போது அந்த முதியவர் உடல் தரையில் கிடந்ததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.
அந்த வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த இரு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் தீயில் அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.








