Dec 5, 2025
Thisaigal NewsYouTube
வெட்டு, கொலை வழக்குகளில் தொடர்புடையதாக நம்பப்படும் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

வெட்டு, கொலை வழக்குகளில் தொடர்புடையதாக நம்பப்படும் இருவர் கைது

Share:

கடந்த நவம்பர் 6 ஆம் தேதி மலாக்கா, ஆயேர் மோலேக், கம்போங் புக்கிட் புன்புன்னில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்ததோடு ஒரு நபரை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதியம் 12 மணியளவில் கார் சக்கரம் பழுது பார்க்கும் கடையில் இருந்து இச்சம்பவம் குறித்து ஒரு பெண்ணின் தொலைபேசி அழைப்பு மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

40 முதல் 49 வயதுடைய அந்த சந்தேக நபர்கள் சக்கரத்தில் இருந்து உலோகத்தைப் பிரிக்க அதனை எரியூட்டிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ட் அர்ஷத் அபு தெரிவித்தார்.

விசரித்த போது, 500 வெள்ளி மதிப்புள்ள பயன்படுத்தப்பட்ட சக்கரத்தின் முகப்பு, பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமான பொருட்கள் உட்பட காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் காவல் துறையால் கைப்பற்றப்பட்டது. மேலும் ஒருவரை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு நீளமான பாராங் கத்தியும் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

அவ்விருவருக்கும் பல்வேறு குற்றப் பின்னணி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு நாளை அலோர் கஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர்.

Related News