Oct 17, 2026
Thisaigal NewsYouTube

நில அமிழ்வு, NKVE சாலையின் ஆபத்து அவசர தடம் மூடப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நில அமிழ்வு, NKVE சாலையின் ஆபத்து அவசர தடம் மூடப்பட்டது

கிள்ளான் பள்ளத்தாக்கில் விரைவு நெடுஞ்சாலையான NKVE- சாலையில் 18.6 ஆவது கிலோ மீட்டரில் பெட்டாலிங் ஜெயாவிற்கு அருகில் நில அமிழ்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த சாலையில் ஆபத்து அவசரத் தடம், அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் மூடப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

கனத்த மழையின் காரணமாக இன்று காலை 11 மணியளவில் அந்த நெடுஞ்சாலை ஓரத்தில் பள்ளத்தை உருவாக்கக்கூடிய பெரிய நில அமிழ்வு ஏற்பட்டது.

வாகனமோட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிள்ளானை நோக்கி செல்லும் அந்த நெடுஞ்சாலையின் ஆபத்து, அவசரத் தடம் மூடப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP Shahrulnizam Jaafar தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →