Jun 30, 2026
Thisaigal NewsYouTube
இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி

Share:

மலேசியப் பெண் ஒருவர் தனது இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்தப் பெண் தனது சுயவிருப்பத்தின் பேரிலேயே இஸ்லாத்தைத் தழுவியதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாக நீதிபதி அல்வி அப்துல் வஹாப் தெரிவித்தார்

இஸ்லாத்தை ஏற்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-இல் இந்த வழக்கு தொடரப்பட்டதில் முறையான காரணங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், இது மதம் மாறிய ஒருவரின் 'மதம் விலகல்' தொடர்பான விவகாரம் என்பதால், இது சிவில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வராது என்றும், ஷரியா நீதிமன்றமே இதனை விசாரிக்க முடியும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதன் விளைவாக, அந்தப் பெண் மலாக்கா சமய மன்றம் மற்றும் மாநில அரசாங்கத்திற்கு 20,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News