தம்முடன் கொண்டிருந்த காதலை முறித்துக்கொண்டார் என்பதற்கான தனது காதலியை கத்தியால் குத்தி காயப்படுத்தி விட்டு, தப்பிய ஆடவர் ஒருவர், பத்து நாள் தேடலுக்கு பின்னர் ஜோகூர், பண்டார் டத்தோ ஆன் னில் பிடிபட்டார்.
கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அம்பாங்கில், புக்கிட் அந்தாரபங்சா வில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 41 வயதுடைய நபர், நேற்று காலை 5 மணியளவில் ஜோகூர்பாருவில் சுல்தான் இஸ்கந்தர் பள்ளி வாசல் வளாகத்தில் பிடிபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார். ஜோகூர்பாருவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு வேலையற்ற நபரான அந்த சந்தேகப்பேர்வழி, ஏற்கனவே இரண்டு முறை சிறைக்கு சென்றவர் ஆவார். விசாரணைக்கு ஏதுவாக அவர் நான்கு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆசம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


