Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சமூக ஊடகத்தில் போலியான சாரா உதவித் திட்டம்
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகத்தில் போலியான சாரா உதவித் திட்டம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.25-

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசிய மக்களுக்கு சாரா திட்டத்தின் மூலம் 100 வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருந்தார்.

ஆனால், அந்த உதவித் தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று சமூக ஊடகத்தில் பரவி வரும் செய்தி போலியானது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

“பந்துவான் சாரா“ உதவித் திட்டத்திற்கு எந்த முன் விண்ணப்பமும் தேவையில்லை என்று நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 100 ரிங்கிட் உதவித் தொகை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசிய குடிமக்களின் மைகாட் அடையாள அட்டையின் அடிப்படையில் தானாகவே அவர்களுக்கு அனுப்பப்படும்.

மேலும், சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி செய்திகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாறக்கூடாது. மோசடிக்கு ஆளாகாமல் தங்களைத் தற்காத்து கொள்ள வேண்டும் என நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related News