கோத்தா திங்கி, ஜன.27-
கால்வாயில் விழுந்து விட்ட செருப்பை எடுப்பதற்கு முயற்சித்த ஒன்பது வயது சிறுவன் ஒருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் கடும் மழைக்கு மத்தியில் ஜோகூர், கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயாவில் நிகழ்ந்தது.
சிறுவனைத் தேடும் பணி, தீயணைப்பு, மீட்புப்படையின் உதவியுடன் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்தெண்டன் யூசோப் ஒஸ்மான் தெரிவித்தார்.







