பத்து பஹாட், செப்டம்பர்.25-
நேற்று ஜோகூர் செங்காராங், பந்தாய் சுங்கை லூருஸ் கடற்கரையில், எரிந்து கொண்டிருந்த கார் ஒன்றை அணைக்கச் சென்றிருந்த தீயணைப்பு படையினர், அதனுள் ஓட்டுநர் இருக்கையில் முற்றிலும் எரிந்த நிலையில் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.
72 வயது மதிக்கத்தக்க அந்நபர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பத்து பஹாட் காவல்துறை தலைமை உதவி ஆணையர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.
திடீர் மரணமாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பான மேல் விசாரணைக்காக, அச்சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அதே வேளையில், இச்சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் ஷாருலனுவார் முஷாடாட் கேட்டுக் கொண்டுள்ளார்.








