Oct 5, 2026
Thisaigal NewsYouTube

கிளந்தானில் அதிகரித்து வரும் இன்ஃபுளுவென்ஸா நோய்த் தொற்று - சுகாதாரத் துறை தகவல்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிளந்தானில் அதிகரித்து வரும் இன்ஃபுளுவென்ஸா நோய்த் தொற்று - சுகாதாரத் துறை தகவல்!

கோத்தா பாரு, அக்டோபர்.08-

கிளந்தானில் கல்வி நிறுவனங்களில் இன்ஃபுளுவென்ஸா நோய்த் தொற்று அதிகரித்துள்ளதை அம்மாநில சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் மொத்தம் ஐந்து கல்வி நிறுவனங்களில் இந்நோய்த் தொற்று பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, நோயாளிகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கூட, சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கிளந்தான் சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஸைனி ஹுசேன் சுட்டிக் காட்டியுள்ளார்.

5 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 514 பேர், இன்ஃபுளுவென்ஸா நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிளந்தானில் அதிகரித்து வரும் இன்ஃபுளுவென்ஸா நோய்த் தொற்று... | Thisaigal News