Oct 18, 2026
Thisaigal NewsYouTube

குழந்தை சித்ரவரை, கணவன், மனைவி கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குழந்தை சித்ரவரை, கணவன், மனைவி கைது

குளுவாங் , செப்டம்பர் 26-

தங்களின் மூன்று வயது மகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு அச்சிறுவனை சித்ரவதை செய்ததாக நம்பப்படும் கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளளர்.

20 வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர், இன்று அதிகாலை 1.50 மணியளவில் ஜோகூர், குளுவாங், என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்தவமனையின் வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று இரவு 9.50 மணியளவில், அந்த மருத்துவமனையின் அவசரப்பிரிவில் கடமையில் இருந்த ஒரு மருத்துவரிடமிருந்து போலீசார் ஓர் அவசர அழைப்பை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் சிறுவன் ஒருவன், உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவர் புகார் அளித்தார் என்று ஏசிபி பஹ்ரின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தம்பதியர், எந்தவொரு குற்றப்பதிவையும் கொண்டிருக்கவில்லை. சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளதாக ஏசிபி பஹ்ரின் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →