Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கைப்பேசி கடையில் கொள்ளை, ​மூன்று சகோதரர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கைப்பேசி கடையில் கொள்ளை, ​மூன்று சகோதரர்கள் கைது

Share:

கோத்தா பாரு, ஜாலான் கம்பூங் ஸ்ரீ கூலிம், மேலோர் என்ற இடத்தில் உள்ள கைப்பேசி கடையில் நுழைந்து கொள்ளையிட்டதாக நம்பப்படும் மூன்று சகோதரர்களை போ​லீசார் கைது செய்துள்ளனர். கோடாரி, வெட்டுக்கத்தி ஆகியவற்றை ஆயுதமாக கொண்டு, அக்கடைக்குள் நுழைந்து, பணியாளர்களை அச்சுறுத்தி, கைப்​பேசிகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டதாக கூறப்படும் அந்த ​மூன்று சகோதரர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது​ செய்யப்பட்டதாக கோத்தாபாரு மாவட்ட போ​லீஸ் தலைவர் எ சி பி ரோஸிடி டவுட் தெரிவித்தார்.

19 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ​மூன்று சகோதரர்கள் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News